தேசிய தரவரிசையில் திருச்சி என்ஐடி 8 ஆவது இடம்
திருச்சி ஜூலை 16 – மத்தியக் கல்வி அமைச்கத்தின் அகில இந்திய தரவரிசையில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) 8 ஆவது இடத்தை பிடிதுள்ளது. மத்தியக் அரசின் கல்வி அமைச்கத்தால் இயங்கும் தேசிய கல்வி நிறுவனங்க்களுக்கான தர மதிப்பீட்டுக்குழு (என்ஐஆர்எப்) சார்பில் அகில இந்திய தரவரிசையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தேசிய தொழில்நுட்பக் கழகம் 7 ஆண்டுகளாக முன்னிலை இடத்தை பெற்று, 10 இடங்களுக்கான தரவரிசையில் இடம் பிடித்து வருகிறது. அதன் படி நிகழாண்டில் 8 ஆவது இடத்தை பிடிதுள்ளது. குறிப்பாக பொறியியல் துறையில் கடந்தாண்டு 66.08 மதிப்பெண்ணிலிருந்து 69.17 மதிப்பெண்கள் பெற்று, 8 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது . ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரித்ததன் காரணமாக தரவரிசையின் அனைத்து அளவுறுகளிலும், குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவநடைமுறையில் கழகம் மேம்பட்டதாக விளங்குகிறது. மேலும் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் காப்புரிமைகளைத் தாக்கல் செய்வதற்கு வலுவான உந்துதலை அளித்து வருகிறது. இவைத் தவிர திட்டங்கள் மற்றும் மானியங்கள், ஆலோசனை மற்றும் தொடர் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தது. பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மேம்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் சராசரி சம்பளத்துடன் பட்டப்படிப்பு முடிவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. 1 முதல் 7 நிலைகளில் உள்ள ஐஐடி நிறுவனங்களுடன் தனது பங்களிப்பையும் பகிர்ந்து, பொறியியல் பிரிவில் 8 வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஒட்டுமொத்த தரவரிசையில் 23 ஆவது இடத்திலிருந்து 21 ஆவது இடத்துக்கு திருச்சி என்ஐடி முன்னேறியுள்ளது. தரவரிசையை தொடர்ந்து ஆதரவளித்து உதவிய ஆசிரியர், பணியாளர்கள், மாண வர்கள் மற்றும் முன்னாள் மாண வர்களை திருச்சி என்ஐடி இயக்குநர் ஜி அகிலா, வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் , அவர் கூறியது : திருச்சி என்ஐடி கடந்த 4 ஆண்டுகளில் பொறியியல் துறையில் 12 ஆவது இடத்திலிருந்து 8 – ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது இது ஒரு கடினமான சாதனையாகும்.
வேலைவாய்ப்புகள் மற்றும் மாணவர்களுக்கான உயர் படிப்புகள் திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக பெருமையைத் தேடித்தரும். தரவரிசைக்கான தரவைத் தொகுப்பதில் எங்களின் நேர்மையான முயற்சிகளுக்காக மதிப்பு அளித்துள்ள என்ஐஆர்எப் தரவு நுண்ணறிவுக்குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.