2140 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
திருச்சி, ஜூலை 16 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாடுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியம் ஆங்கிலே இந்தியன் மேனிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 2,140 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரும் சதுரங்க விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோரிடம் உலகசாதனை நிகழ்விற்கான சான்றிதழ் மற்றும் பத்தக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜூடிகேட்டர் அமீத் கே.ஹிங்கரோணி மமற்றும் அட்ஜூகேட்டர் முனைவர் சத்யஸ்ரீகுப்தா, ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாசிடர் மருத்துவர் செந்தில்குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின்சீனியர் அட்ஜூடிகேட்டர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்ரமணியன், மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு குறித்த கற்பித்த பாரா ஒலிம்பிக் மூத்த வீராங்கணை ஜெனித்தா ஆண்டோ, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்கமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கி.பிரதீப்குமார், பள்ளி முதல்வர் அருட்சகோதரார் ஜேம்ஸ்பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.