மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்காத 21,700 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

0 324
Stalin trichy visit

திருச்சி மாநகரில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மழைநீர் முழுவதும் சாலைகளை ஆக்கிரமிக்கின்றன.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் முறையான மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல் லாததும் பிரச்சினையாக இருக்கிறது. பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மண் தரையை பார்க்கவே இயலவில்லை. அனைத்து பகுதிகளில் கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இதில் பெய்யும் மழைநீரை திருப்பி சாக்கடை கால்வாய்க்கு அனுப்புகிறார்கள்.கன மழையில் சாக்கடை நிரம்பி சாலைக்கு வருகிறது.

21 ஆயிரத்து 700 பேருக்கு நோட்டீஸ் இதற்கிடையே குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் முறையாக பராமரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதா? என்றும், அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் வைக் கப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிடம் இல்லாத 21 ஆயிரத்து 700 கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இயங்கா மல் இருக்கும் கட்டிட உரிமையாளர்கள் 5,054 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி ஆணையர் முஜிபுர் ரகுமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.