சென்னை சம்பவத்தை கண்டித்து திருச்சியில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

0 123
Stalin trichy visit

திருச்சி, டிச.20  சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் செவிலியர்கள் தொடரும் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் MRB செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்து வெளி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தினர். இதனை கண்டித்து அங்கேயும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அசாதாரண சூழலை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் காவல்துறையையும், தமிழக அரசையும், அமைச்சரையும் கண்டித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் MRB செவிலியர்கள், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னையில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அசாதாரண சூழலை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் காவல்துறையையும், தமிழக அரசையும், அமைச்சரையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.