ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா : பகல்பத்து உற்வசம்

0 133
Stalin trichy visit

திருச்சி, டிச.20  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்வசம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று (20.12.2025) தொடங்கியது.

விழாவின் முதல் நாளான இன்று காலை, ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து, கல் இழைத்த நீள்முடி கிரீடம் சாற்றி, சிறிய நெற்றி சுட்டி பதக்கம்,
திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் – ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம்,சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை,8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் – அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை பக்தர்களுக்கு சாதித்து வருகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.