அமைச்சர் அன்பில்மகேஸ் பிறந்தநாளையொட்டி மனநல காப்பகத்தில் உணவு வழங்கல்

0 428
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஈச்சம்பட்டியில் உள்ள வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு காலை உணவு வழங்கினர்.

சமயபுரம் ஈச்சம் பட்டியில் உள்ள வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் 80 க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை்வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் டிசம்பர் 2 ந்தேதியன்று
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் பிறந்தநாள்.இந்த பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் ஈச்சம் பட்டியில் உள்ள வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு திமுக நிர்வாகிகள் காலை உணவு வழங்கினர்.அப்போது காப்பகத்தில் உள்ளவர்கள் அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பிரார்த்தனை செய்து வாழ்த்தினர்.

இந்தசிறப்பு உணவு மருதூர் பண்ணையார் ராமசாமி நாட்டார் தலைமையில் ராஜேஸ்வரி தர்மராஜ் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. இதில் சம்பத், ராஜா, கலைச்செல்வன், முத்துகிருஷ்ணன் லோகேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.