குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் குடும்பத் தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே எசனைக்கோரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தம்.இவரது மகன் 35 வயதான பால்ராஜ். இவர் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இன்னலையில் கடந்த 30ஆம் தேதி இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.