ஒரு நாள் கல்வி சுற்றுலா : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
சென்னை, அக். 12 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞரால் சென்னையில் எழுப்பபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்கும், அறிவு சார்ந்த கட்டிடங்களுக்கும் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களை அழைத்துச் செல்லும் “கலைஞர் வழித்தடத்தில் ஒரு பயணம்”
எனும் மாணவச் செல்வங்களுக்கான ஒருநாள் கல்விச் சுற்றுலாவை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முனைவர் .க.அறிவொளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.