சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு…

0 392
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொணலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். உடன் வந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுகன்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் 21 வயதான தினேஷ். இவர் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி. டெக் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடி காடு பகுதியைச் சேர்ந்த 21 வயதான முகமது தாரிக் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த மிதுன் சங்கர்.நேற்று இரவு இவர்கள் கொணலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதிக்கு சாப்பிடுவதற்க்காக சென்றுள்ளனர்.பின்னர் திரும்பி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் பைக்கை தினேஷ் ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் கொணலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு தப்பிச் சென்றது.இதில் நிலை தடுமாறி விழுந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.