சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

0 295
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளி விடையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத மோட்டார் பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.

சமயபுரம் அருகே மாடக்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் 53 வயதான செல்லத்துரை.இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பள்ளிவிடை பேருந்து நிலையம் எதிரே சாலையை கடக்க முன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் பைக் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

Leave A Reply

Your email address will not be published.