சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

0 361
Stalin trichy visit

முசிறி அருகே அய்யம்பாளையத்தில் இருந்து தண்டலை கிராமத்திற்கு செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி கருப்பு கோவில் கொட்டம் என்ற இடத்தில் சாலையின் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் தொழிலாளர்கள் பெரமூரை சேர்ந்த சுதாகர், ராஜாத்தி, வீரமணிபட்டியை சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி, வேளகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி(47) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின் சுதாகர், ராஜாத்தி, சந்திரா, மலர்கொடி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் துரைராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.