ஒரு லட்சம் பயணிகள் – 160 ஆண்டு கால பழமை கொண்ட திருச்சி ரயில்வே ஜங்ஷன்!

0 465
Stalin trichy visit

ரயில் பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகாக அமர்ந்து செல்லும் இருக்கைகளும், எழில் கொஞ்சும் இடங்களும், ஊர்ந்து செல்லும் அழகும் என சாலையில் செல்வோரை கூட ஒரு நிமிடம் அப்படியே திகைக்க வைக்கிறது.

தென் தமிழகத்தில் இணைக்கும் ஒரு முக்கியமான ஒரு இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் முதல் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடம். கொரோனா காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்பட்டாலும் இதனுடைய வரலாறும் பெருமையும் திருச்சி மக்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அங்கமாக வகிக்கக்கூடியது.

அப்போதைய சிராப்பள்ளி மாகாணத்தில் 1862 ஆண்டுகளில் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் விட்டுச்சென்ற அழகான ஒரு பொக்கிஷம் தான் இந்த திருச்சி ரயில்வே ஜங்ஷன். இன்று தெற்கு ரயில்வே என அழைக்கப்படுவது அன்று சவுத் இந்தியன் ரயில்வே(SIR) என்று நாகப்பட்டினத்தில் அமைந்தது. அதன்பிறகு திருச்சியின் வளர்ச்சியும் அமைவிடமும் அதனை அப்படியே திருச்சி நோக்கி வரவழைத்தது.

கிட்டத்திட்ட தற்போது திருச்சியில் பொன்மலையோடு சேர்த்து ரயில்வே நிர்வாகத்திற்கு 210 ஏக்கர் அளவில், ரயில்வே பணிமனையில் வீடுகளும், கோவில்களும் என ஒட்டுமொத்தமாக திருச்சியின் மையப்பகுதியில் ரயில்வேக்கு என்று ஒரு அங்கமாக வகித்து வருகிறது. அவர்கள் வழிவந்த ஆங்கிலோ இந்தியர்கள் இன்றளவும் பொன்மலை பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அதன்பிறகு 1925 காலகட்டங்களில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் புதுப்பிக்கப்பட்டு மாறுதல்கள் அடைந்து கிட்டத்தட்ட அதன் பிறகு ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல்வேறு பரிணாமங்களை கொண்டு நீராவி என்ஜின் முதல் தற்போது மின்சார ரயில் வரை திருச்சியில் 8 நடைமேடைகளும் எப்பவுமே பிஸியாக வைத்துக் கொள்கின்றன.

காலத்தின் வளர்ச்சியாலும் நாகரீகத்தின் வளர்ச்சியாலும் அடுத்தடுத்த கட்டத்தை திருச்சி ரயில்வே ஜங்ஷன் நோக்கி செல்கிறது. தற்போது தென்னக ரயில்வேயாக எழில்மிகு தோற்றத்தோடு தினந்தோறும் இலட்சக்கணக்கான பயணிகளை சுமந்து செல்லும் ரயில்களும், பயணிகளின் வசதிக்காக எஸ்கலேட்டர் பணிகளும் என ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சியின் பெருமைகளும் சுமந்து நிற்கும் ஒரு அடையாளமாக இன்றளவும் திருச்சி ரயில் நிலையம் இருந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.