நள்ளிரவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ளது கரட்டாம்பட்டி ஊராட்சியில் கடந்த முறை நடத்தப்பட வேண்டிய கிராம சபை கூட்டம் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வில்லை. இதனால் அன்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய கோரி கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா கிராம சபை கூட்டம் நடைபெற்றவாறு ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பின்பு பதிவேட்டில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.