சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி
திருச்சி, ஆக.11 சுதந்திர தினத்தை முன்னிட்டு இறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் ஓவிய போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி, ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ம.சு விஜய் ஆனந்த், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ், ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் என். ராம்குமார் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின், இறகுகள் அகாடமியின் நிறுவனர் ரா .மரிய மெர்சி ஆகியோரைக் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஓவியப் போட்டியின் நடுவராக கலை வளர்மணி மு ஜெயவர்த்தினி ஓவியர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசு சிறப்பு ஆசிரியர் விருந்தாளர் ஐந்தாம் தலைமுறை ஓவியன் ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்டு 1 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. அவற்றில் சிறந்த ஓவியர்களுக்கு ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அது மட்டும் இன்றி இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களின் திறமகளை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு இறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நுழைவு கட்டணம் இன்றி அனைவருக்கும் இலவச நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி இறகுகள் தொண்டு நிறுவன நிறுவனர் ஜே .ராபின் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது