தெற்கு மாவட்ட அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருச்சி ஆக 11 திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பங்கேற்பு
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு,மணப்பாறை ,திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் மாவட்ட_நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட புதிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கமுருதீன் தன்சிங், நாசர், அனுசுயா, முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், பஷீர் அகமது, வீர மணிமாறன், சசிகுமார், பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், கல்நாயக் சதீஷ்குமார், பொன்மலை சங்கர், கதிரவன், வேதாத்திரி நகர் பாலு வெங்கட்ரமணி, கருப்பையா, சீனி ராஜ்குமார், அழகர்சாமி, மணிகண்டன், துவாக்குடி ராஜா, வழக்கறிஞர் செங்குற்றவன், மதிவாணன்,வெள்ளைச்சாமி, அப்துல்லா, நல்லுசாமி, சிங்காரம், பொன்னம்பட்டி சாகுல்,
சார்பு அணி செயலாளர்கள் முருகானந்தம், நாகநாதர் சிவகுமார், கண்ணன் ,வக்கீல் பிரகாஷ், சாந்தா, தண்டபாணி, ஆனந்தராஜ், செந்தில்குமார், நாகூர் மீரான், நல்லம்மாள் அகிலாண்டேஸ்வரி, மலைக்கோட்டை சங்கர், தருண், கோபிநாத், சுபாஷ், சதாம்,
கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு, ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.