ஊராட்சி மன்ற தலைவர்கள் சமுதாய அமைப்புகளுடன் பயிற்சி முகாம்
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முசிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் விவசாயக் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து கிராம முன்னேற்றத்திற்கு செயல்படுவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை ஒன்றியக்குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இரண்டு நாட்களுக்கு ஆறு ஊராட்சிகள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.நேற்று பயிற்றுனர் சம்பத் குமார் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் குழுவினர்களுக்கு பயிற்சி அளித்தார். கிராம முன்னேற்றம் மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து நிறைவேற்றுவது, கிராம பொருளாதாரத்தை முன்னேற்றுவது, கிராமங்களை தன்னிறைவு அடையச் செய்வது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, உள்ளிட்ட அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இறுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சரவணன் நன்றி கூறினார்.