பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 191
Stalin trichy visit

திருச்சி, நவ.11 திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகளைஅமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்த பின்னர் கூறுகையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகளானது பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர். கட்டுமானப் பரப்பளவு 7.02 ஏக்கர். புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78. ஆக மொத்தம் 404 பேருந்து நிறுத்த தடங்களின் கட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர நகரப்பேருந்து நிறுத்த தடங்கள் 60 கட்டப்பட்டு வருகிறது. இங்கு 70 கடைகள். 556 நான்கு சக்கர வகானங்கள் நிறுத்துவதற்கான வசதி . 1125 இரண்டு சக்கர வாகன நிறுத்துவதற்கான வசதி. 350 ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான ஆட்டோ நிறுத்தம் மற்றும் நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மய்யமானது 5.20 ஏக்கர் பரப்பளவிலும், அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அடித்தள கட்டுமான பரப்பளவு 1.47 ஏக்கர். தரைத்தள கட்டுமான பரப்பளவு 2.46 ஏக்கர். முதல் தள கட்டுமான பரப்பளவு 2.29 ஏக்கர். 2ஆம் தளம், 3ஆம் தளம் மற்றும் 4ஆம் தள கட்டுமானங்களின் பரப்பளவு 0.22 ஏக்கர். தரைத்தள கடைகளின் எண்ணிக்கை 149. முதல் தளத்தளத்தில் 193 கடைகளின் கட்டப்பட்டு வருகின்றன. கனரக சரக்கு வாகன முனையம்: மொத்த பரப்பளவு 29.00 ஏக்கர், கட்டுமான பரப்பளவு 2.88 ஏக்கர், தொகுப்பு -1 வாகன நிறுத்த தடங்கள் 256, தொகுப்பு -2 வாகன நிறுத்த தடங்கள் 104. தரைத்தள கடைகள் 20. முதல் தளம் தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது.
சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்: சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 1048 மீ. அகலம் 36 மீ.(ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதி). சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 744 மீ. அகலம் 24 மீ.(கனரக சரக்கு வாகன முனையம் பகுதி). ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் , மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் , நகரப் பொறியாளர் பி.சிவபாதம், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.