திருச்சி ஜங்சனில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

0 464
Stalin trichy visit

திருச்சி, நவ.16.பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக ரயில் பெட்டிகள் தயார் செய்வது மற்றும் – ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்ற பணிகள் நடைபெறும். அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் பயணிகள் ரயில் ஒன்று திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட போது மதியம் சுமார் 3 மணி அளவில் தண்டவாளத்தில் இருந்து ரயில் சக்கரம் கீழே இறங்கியது இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்திலிருந்து இறங்கி பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.