நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0 275
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப.,  திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

கடந்த 24.04.22-ம்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டிரைனேஷ் தெரு, SS கார்டனில் நள்ளிரவு 02.00 மணிக்கு வாட்சுமேனின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும், மண்வெட்டியால் தாக்கியும், வாட்சுமேன் மனைவி அணிந்திருந்த 4 கிராம் எடையுள்ள தோடுகள், பணம் ரூ.10000/- மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரிகள் 1)மகேஸ்வரன் வயது 27 த/பெ.சிதம்பரம், 2),அஜித்குமார் வயது 23
த/பெ.சார்லஸ் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மகேஸ்வரன் மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 6 வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், எதிரி அஜித்குமார் மீது முன்விரோதத்தால் ஆட்டோவை அடித்து நொறுக்கியும், அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கு உட்பட 10 வழக்குகளும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் மகேஸ்வரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப.,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளின் மீது குண்டர் தடுப்பு சட்டம்
ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில்  ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.