ஆயுத பூஜை விஜயதசமி முன்னிட்டு காந்தி மார்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…
ஆயுத பூஜை விஜயதசமி முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்.

நவராத்திரி விழாவில் முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தன்று வீடுகளில் இன்பம் நிலைக்க, செய்யும் தொழில் நலம் பெற வேண்டி பூக்கள்,பழங்கள், வாழை தோரனங்கள்,சுண்டல்,பொறி உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பொறுத்தவரை திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதிகாலை முதலில் ஆர்வமுடன் வங்கி செல்கின்றனர்.
குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபார சந்தையில் உள்ள பூ மார்கெட்டில் பூக்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.