திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் வயல்களில் கட்டி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 200 செம்மறி ஆடுகள் திருட்டு போனதாக பாதிக்கப்பட்ட விவசாயியின் தகவலின் பேரில் திருட்டுத் தொடர்பாக போலீசார் விசாரணை.
லால்குடி அருகே புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அழுந்தலைப்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தெற்குத்தெருவைச் சேர்ந்த ராமசாமி , சோலைமுத்து இருவரும் அண்ணன் தம்பிகள். ராமசாமி மகன் பெருமாள் (55). சோலைமுத்து மகன் ரெங்கராஜ் (51). இருவரும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது 200 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் இவர்களுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் வயல் பகுதியில் இவர்களது ஆடுகளை பட்டி (கொட்டகை ) அமைத்து இரவு நேரங்களில் ஆடுகளுக்கு காவலாக அண்ணன் தம்பி இருவரும் காவலுக்கு இருந்து மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு அண்ணன் , தம்பி இருவரும் காவலுக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருவரும் தூங்கி விட்டனர். காலையில் சென்று பார்த்த போது வயலில் பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 200 செம்மறி ஆடுகள் அனைத்தும் திருடுப் போனது தெரிய வந்தது.
திருட்டு குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகனூர் போலீசாரிடம் கேட்டதற்கு பாதிக்கப்பட்ட நபர் இது வரை எழுத்துப் பூர்வமாக் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் சமயபுரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.