சாலையை சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி, டிச.4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருச்சி மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தனர் அம் அணுவில் தெரிவித்திருப்பதாவது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் அய்யம்பாளையம் பஞ்யைத்திற்கு உட்பட்ட தெற்கியர் வழியாக கீழர் அக்கரைப்பட்டி சீரடி சாய்பாபா கோவில் தேவிமங்கலம், சமயபுரம் டோல் பிளாசா ஆகிய பதிதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய தார் சாலையாக உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக புதுபிக்கபடாமல் மிவும் சேதமடைந்து குண்டும் குழியாக காணப்படுகிறது மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையானது மழைநீரானது குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் தேங்கியுள்ள நீர்களில் கொசுவால் டெங்கு காய்ச்சல் குழந்தைகள் முதல் பெரியவல்கள் வரை நோய் தாக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் அச்சுருத்தலாக உள்ளது.
சில நேரங்களில் நிலை தடுமறி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர் இதனால் சாயங்கள் ஏற்படுகின்றது.
இது சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் கிராம பொது மக்கள் 17 ஆண்டுகனாக அய்யம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.