ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு உடல் பரிசோதனை

0 351
Stalin trichy visit

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்ட நிலையில் திருச்சி நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டனர் – மீண்டும் 21ம் தேதி மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில்,உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 11 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையிலும், ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில்,அந்த 12பேரில்,சாமி ரவி,  திலீப் (((எ)() லெட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய பேர் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று வந்திருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும்,
இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து
மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதனை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது – இதில் 5 பேருக்கும்,ரத்தப் பரிசோதனை,இசிஜி, எக்ஸ்ரே இதய பரிசோதனை மேற்கொள்ளவதோடு மனதளவில் சீராக உள்ளனரா என்பது கண்டறியப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது – மருத்துவ பரிசோதனையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.