திருச்சி மாவட்டம் மேற்கு பகுதியில் புறா பந்தயம் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த பந்தயத்தில் அதவத்தூர், கொய்யாதோப்பு, பள்ளக்காடு, போசம்பட்டி, சாந்தபுரம், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, சிங்கபுரம், சுண்ணாம்புகாரன்பட்டி, தாயனூர் ஆகிய ஊர்களின் புறாக்கள் கலந்து கொண்டன. இதில் கர்ண புறா மற்றும் அதிக நேரம் பறக்கும் சாதா புறா என இரண்டு வகையாக பிரித்து பந்தயம் நடைபெற்றது. இதில் கர்ண புறா பந்தயத்தில் சாந்தாபுரத்தை சேர்ந்த பாஸ்கரின் புறாவும், அதிக நேரம் பறக்கும் சாதா புறா பந்தயத்தில் பள்ளக்காடு பெரியய்யா என்பவரின் புறாவும் முதல் பரிசு பெற்றன. இவர்களுக்கும், 2 மற்றும் 3-ம் இடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.