ஆகஸ்ட் 15க்குள் பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருமற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று மாலை மாநகராட்சி மேயர், ஆணையர் இருவரும் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது புதிய முனையத்தை சென்று ஆய்வு செய்தது குறித்த கேள்விக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளவை மேலும் முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் புறப்பாடு செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்த்து பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளளேன் என்று கூறினார்.