கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு
திருச்சி, ஜூலை 4 தொண்டாமுத்தூரில் மரம் நடும் விழா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொண்டாமுத்தூர் கிளை நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு தொண்டாமுத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சுப்பு. தர்மன் தலைமையற்றார். பொறுப்பு நூலகர் ஸ்டெல்லா மேரி வரவேற்புரையாற்றினார் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரவி பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் கமலம் ரவி ஆகியோர் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர். விழாவில் பேரூராட்சி மன்ற துணை பெருந்தலைவர் நடராஜ், முன்னாள் துணை தலைவர் சேகர், கவுன்சிலர் தியாகு, ரோட்டரி சங்க கோவை மாவட்ட துணை ஆளுநர் குமார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஷைனி சிவகுமார், சாந்தி, பேரூராட்சி மேற்பார்வையாளர் அய்யாசாமி, தொண்டாமுத்தூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மாணிக்கம்மாள், எஸ்.ஆர்.மீராபாய் ஆசிரியர், வி.ராஜாமணி, பூவாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர்.