கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, பேச்சு, ஓவியப்போட்டிகள்; 2-ந் தேதி நடக்கிறது

0 339
Stalin trichy visit

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநகர செயலாளர் சிவ.வெங்கடேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளா. அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த நாளையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

‘ஈஸ்வர அல்லா’ என்ற தலைப்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 15 முதல் 20 வரிகளுக்கு மிகாமல் கவிதைகளை அழகின் சிரிப்பு, 23, ஆனி வீதி, செல்வநகர் விரிவாக்கம், பொன்னகர், திருச்சி-620 001 என்ற முகவரிக்கு 29-ந் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டும். அக்டோபர் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் தமிழ்நாடு-வில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடக்கிறது. போட்டிக்கு 30 நிமிடங்கள் முன்பாக தலைப்பு கொடுக்கப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.