திருச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. “இரும்புருக மண் காயும் பின்னர் பொழியும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் இரவு 9 மணி அளவில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
நகர்புற பகுதிகளை விட நவலூர் குட்டப்பட்டு, லால்குடி, சமயபுரம், துவாக்குடி, மணப்பாறை போன்ற புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கனமழை பெய்தது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக நவலூர் குட்டப்பட்டு 82 மி.மீ,
துவாக்குடி 70 மி.மீ,
சமயபுரம் 45.50 மி.மீ,
மணப்பாறை 32.80 மி.மீ,
லால்குடி 45.40 மி.மீ,
கள்ளிக்குடி 15.20 மி.மீ,
பொன்னி ஆறு அணை 17.80 மி.மீ,திருச்சி ஜங்ஷன் 18.30 மி.மீ, திருச்சி நகர்புற பகுதிகள் 14மி.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.