தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லால்குடி டிஎஸ்பி தலைமையில் சமயபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
.
சமயபுரத்தில் உள்ள தனியார் தங்கும் உரிமையாளர்களுடன் சமயபுரம் போலீசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், லாட்ஜிகளில் சிசிடிவி கேமிரா பொருத்திட வேண்டும். வருகை பதிவேட்டில் அடையாள அட்டை, நகல் காப்பி பெற வேண்டும். சந்தேக நபர்களாக தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபான விற்பனை, சூதாட்டம், விபச்சாரம், மசாஜ் போன்றவற்றை அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வாகன நிறுத்தம் இடம் உரிய வகையில் ஏற்படுத்திட வேண்டும். நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் பட்டியல் தினமும் காலை 7 மணிக்கு காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காவல் நிலைய தொலைபேசி எண்கள் பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சமயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் செய்திருந்தார்.