மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பிரேக் இன்ஸ்பெக்டர்- புரோக்கர் கைது
திருச்சி, டிச.12 திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் மணிபாரதி வாகன பதிவு சான்றிதழ், மற்றும் வாகன பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெற்ற நிலையில், இன்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிரேக் இன்ஸ்பெக்டர் மணிபாரதியையும் புரோக்கர் ஆக செயல்பட்ட திலீப் என்பவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சோதனையின் போது புரோக்கர் மற்றும் பிரேக் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் 14000 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது