வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சியில் வரும் 26 ஆம் தேதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் – நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு..
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி திமுக கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று, தற்போது கழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், மாநிலம் முழுக்க கழக மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு, திருச்சிராப்பள்ளி தெற்கு, திருச்சிராப்பள்ளி மத்திய, திருச்சிராப்பள்ளி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய 15 கழக மாவட்டங்களில் மாவட்ட கழக செயலாளர் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பாசறை பயிற்சி கூட்டம் நடைபெறும் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருமண்டபம் அடுத்த ராம்ஜி நகர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, விழா நடைபெறும், இடத்தையும் தேவையான முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன்,ஒன்றிய செயலாளர் மாத்துார் கருப்பையா, பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர் கிராப்பட்டி செல்வம்,பந்தல் சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்…