உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொன்னணியாறு அணை ஆய்வு

0 172
Stalin trichy visit

திருச்சி, அக். 16 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அணையின் தற்போதைய தண்ணீர் இருப்பு, தண்ணீர் வரத்து குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அணையின் ஷட்டரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் வையம்பட்டி காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலை கடை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரதீப்குமார் மக்களின் குறைகளைக் கேட்டு இன்று நாளையும் பல்வேறு இடங்களில் ஆய்வுக் கொள்ள இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஸ்ரீரங்கன், ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.