கே.கே.நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திருச்சி, அக். 14 கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (அக் 15) பராமரிப்புகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜா மலை காலனி, S.M.E.S.E காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்,ஐ,சி காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகா மாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்,வி.எஸ் நகர், வயர்லஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நாளை (அக் 15) காலை 9.45 மணி முதல், மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.