திருச்சி மண்ணச்சநல்லூர் சுனைபுகநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வடிவேல்(வயது 28). இவர் கடந்த மாதம் பூனாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து தப்பியோடினான். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி வடிவேலை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் திருப்பஞ்சீலி பழைய டாஸ்மார்க் கடை அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று வடிவேலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த 1¾ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி பாராட்டினார்.