மகளிர் மிதிவண்டி பயணம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு திருச்சி அண்ணாநகர் இணைப்புச் சாலையில் இருந்து தென்னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெற்ற மகளிர் மிதிவண்டி பயணத்தை மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அருகில் நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்பட பலர் உள்ளனர்.