“தேசிய நல்லாசிரியர் விருது” – திருச்சி ஆசிரியைக்கு ஜனாதிபதி வழங்கினார்!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது அதன்படி நாடு முழுவதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது அதையொட்டி அரசியல் தலைவர்கள் ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடுமுழுவதும் 44 ஆசிரியர்கள் தேர்வு எடுக்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆஷா தேவி உட்பட இரண்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மத்திய கல்வி துறை அமைச்சகம், சென்னை ராஜாஜி பவன் மையம் ஆகிய இடங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு வீடியோ கான்பரன்சிங்கில் நேற்று நடந்தது. இதில் சென்னையில் ஆஷா தேவி கலந்துகொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார்.
