தமிழகப் பெண்கள் செயற்களம் / தமிழரண் மாணவர்கள் சார்பில் பரிசளிப்பு விழா..

0 330
Stalin trichy visit

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழகப் பெண்கள் செயற்களம் / தமிழரண் மாணவர்கள் சார்பில் திருச்சி மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான
தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் “கலக்க வராங்க தமிழ்ப் பசங்க” தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள்
தமிழகப் பெண்கள் செயற்களம் செயலாளர் தீபிகா சிவக்கொழுந்து, தலைமையில் நடந்தது. தமிழரண் மாணவர்கள் வே.கனிமொழி வரவேற்புரையாற்றினார்.

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழக மாணவர்கள் இணைந்து நடத்தும் கலக்க வராங்க தமிழ் பசங்க என்ற போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் கலாச்சாரங்கள் சார்ந்த மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பேச்சு,கவிதை, பாட்டு போட்டிகள் நடைபெற்றன இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டினர்கள்.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் க.சி. நீலமேகம், கலைக் காவேரி கல்லூரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், இரா.ஞானசுசீகரன், செ. ஜோசப் கென்னடி,
ம.அந்தோணி துரை , தமிழகப் பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன், நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கி , வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, போன்றவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறையை சிறப்பாக அமைக்க முடியும், தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா கலாச்சாரத்தில் மாணவர்கள் அழிந்து வருகிறார்கள். அவர்களை மீட்டெடுப்பதற்காக தான் தற்போது இந்த நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம் என்று கூறினார். தமிழரண் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் ப.அய்யப்பன், மு.தி. இளன், தி. தென்றல் நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.