புதுமை கண்டுபிடிப்பு சவால் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

0 571
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மருதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய மாணவர் புதுமை கண்டுபிடிப்பு சவால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

எய்டு இந்தியா மற்றும் ஈ . வித்யாலயா மூலம் இணைய வழி கல்வி வகுப்பு மருது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது .இந்த வகுப்பின் மூலம் தேசிய மாணவர் புதுமை கண்டுபிடிப்பு சவால் போட்டி தேசிய அளவில் நடைபெற்றது. இணைய வழி மூலம்பெங்களூரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கலந்து கொண்டு தங்களுடைய புதுமை கண்டுபிடிப்பு சவால்களை அறிக்கையாக சமர்ப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் நட்சத்திர ரோஸ்மேரி அனைவரையும் வரவேற்று பேசினார்.எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன் நிகழ்ச்சி அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். இறுதியில் இணைய வழி உதவி ஆசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.