பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு எதிர்ப்பு – போலீஸில் புகார்
திருச்சி தேவர் ஹாலில் கடந்த 17. 4. 2022 அன்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட வரலாற்று நாடகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட T.V.K.Cultural Acadamy உரிமையாளர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் திமுக பிரமுகரும் MP சிவா மகன் சூர்யா மனு அளித்தார் மேலும் திருச்சி மட்டுமின்றி சென்னையிலும் மே 1,8 மற்றும் மே 22 ஆம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் இந்த நாடகம் அரங்கேற்றம் செய்ய உள்ளனர் மேலும் இந்த நாடகத்தின் வரலாற்று கதையும் இல்லாத விஷயத்தை நாடகம் என்ற பெயரில் நடத்தி அதற்கிடையில் நடைபெறும் உரையாடலை தமிழ்நாட்டு முதலமைச்சர் அசிங்கப்படுத்தி ஏராளமான செய்திகள் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடத்தவுள்ளனர் ஆகவே திருச்சி போல மற்ற இடங்களில் நடக்க வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக திருச்சி மாவட்ட மாநகர காவல் ஆணையர் நேரடியாக சந்தித்து திருச்சியில் நடந்தது நாடகத்தைப் பற்றி நேரடியாக விளக்கினார்