பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ரவுண்டானாவில் அன்பில் கிராமத்தில் இராட்சச போர்வெல் ஆழ்துளை கிணறு அமைப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரையும், பொது மக்களையும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல் துறையினரை கண்டித்தும், ஆழ்துளை கிணறு அமைப்பதை நிறுத்த கோரியும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் அன்பில் கிராமத்தில் ராட்சச போர்வெல் ஆழ்துளை கிணறு அமைப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரையும், பொது மக்களையும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல் துறையினரை கண்டித்தும், ஆழ்துளை கிணறு அமைப்பதை நிறுத்த கோரியும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லால்குடி அருகே கீழ அன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 110 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல ஆழ்துளை கிணறு அமைக்ககும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை நிறுத்த கோரியும், ஆழ்துளை கிணறு அமைக்க எதிப்பு தெரிவித்தும் அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கீழ அன்பில், திண்ணியம், நடராஜபுரம், மங்கம்மாள்புரம்,அரியூர் குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கு மேற்பட்டோர் கடந்த 2 ந்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் பொது மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்தும் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதை நிறுத்த கோரியும் திருச்சி புறநகர் மாவட்டம் லால்குடி ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பொதுமக்கள் விவசாயிகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.