ஆசிரியை மீது நடவடிக்கை கோரி போராட்டம்

0 192
National

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் மாணவிகளை தரக்குறைவாகபேசியதாக கூறி 10 -ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் தங்களது கைகளை கத்தியால் கீறிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்கள் ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் துணை தாசில்தார் வெள்ளைச்சாமி ஆகியோர் விரைந்து வந்து ஆசிரியை மீது குற்றச்சாட்டு கூறிய மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் செல்வி கூறும்போது, மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மற்றொரு ஆசிரியை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!