கொட்டும் மழையிலும் குடை கூட இல்லாமல் மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று அதிகாலை முதல் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் தனது வார்டில் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்தே சென்று பாதாள சாக்கடை பணிகள்,மழையினால் குண்டும் குழியுமாக உள்ள இடங்கள், சாக்கடையில் இருந்து வெளிவரும் கழிவுநீர் அகற்றும் பணிகள்,சாலைப் போடும் இடங்கள், கோயில் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் என்று காலை 5-மணிமுதல் விறுவிறுப்பாக தனது செயல்கள் மூலம் பணிகள் ஆற்றி தனது வார்டு மக்கள் வியந்து போற்றும் அளவிற்கு ஓர் உன்னதமாக விளங்கி வருகிறார், தனது வார்டு மக்கள் பலர் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் எங்கள் கவுன்சிலர் என்று பாராட்டி வருகின்றனர்.