துறையூரில் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, ஆக.31 திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆர்த்தி மகாலில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் கிளை செயலாளர்களிடம் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ.சரவணன் மாவட்ட ஆதிதிராவிடர் குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.