சீரமைக்கப்பட்ட புதுவாத்தலை – ராமவாத்தலை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு

0 349
Stalin trichy visit

திருச்சி, ஆக. 31 காவேரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால் விவசாயிகள் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டியிடம் கோரிக்கை வைத்தனர்,  சட்டமன்ற. உறுப்பினர் M.பழனியாண்டி  உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை நேரில் சந்தித்து வாய்க்கால்களை சீரமைத்தார்.

புதுவாத்தலை, ராமவாத்தலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று  காலை சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி  பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து வைத்தார். உடன் இரண்டு பாசன வாய்க்கால் ஆயக்கட்டு விவசாயிகள், கழக நிர்வாகிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.