மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூர் பகுதியில் பெய்த மழையால் மழைநீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மணப்பாறை– கரும்புளிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மழைநீர் செல்ல முறையான வழித்தடத்தை ஏற்படுத்தி கால்வாய்களை தூர்வாரி இனிவரும் மழைகாலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும் என்று கூறினர். உடனே அதிகாரிகள் உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.