மண்ணச்சநல்லூரில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி, மே 30 மண்ணச்சநல்லூரில் பராமரிப்பு பணிக்காக 12 மணி நேரம் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தற்போது கோடை காலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் , மழை மற்றும் தற்போது சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகள் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது.
இதில் நேற்று மின் பராமரிப்பு காரணத்திற்காக மின் இணைப்பு மண்ணச்சநல்லூர் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது. இயல்பாக மின் பராமரிப்புகாக காலை 9 .45 மணி நிறுத்தப்பட்ட மாலை 4 .45 மணி நிறுத்தபடும் சுமார் 7 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.
ஆனால் மண்ணச்சநல்லூர் பகுதியில் மட்டும் மாதாந்திர மின் பராமரிப்பு நாட்களில் காலை நிறுத்தபடும் மின் இணைப்பு சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு வழங்கபடுகிறது.
இந்நிலையில் நேற்று மாதாந்திர பராமரிப்பிற்கு நிறுத்தப்பட்ட மின் இணைப்பு 12 மணிநேரமாகியும் மின் இணைப்பு வராததால் மண்ணச்சநல்லூர் முழுவதும் வெளிச்சம் இல்லாததால் வணிகர்கள், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் மற்றும் வீட்டின் அத்தியாவசிய பொருட்கள் பயன் படுத்த முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் மண்ணச்சநல்லூர் பகுதியில் மட்டும் அடிக்கடி வெட்டு காரணம் என்ன ?
சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்மதமாக பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் துணை மின் நிலைய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் மெத்தனமாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது. எனவே மண்ணச்சநல்லூர் பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.