ராமஜெயம் கொலை வழக்கு : உண்மைக் கண்டறியும் சோதனை விசாரணை ஒத்தி வைப்பு

0 370
Stalin trichy visit

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புறனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 13 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தின் வாயிலாக அனுமதி கோரி இருந்த நிலையில் இன்று சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள ஒன்பது ரவுடிகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ரவுடிகள் சாமி ரவி, ராஜ்குமார்,திலீப் (எ) லட்சுமி நாராயணன்,சண்முகம், மாரிமுத்து, சத்யராஜ்
என 9 ரவுடிகள் வழக்கறிஞர்களுடன் இன்று வந்திருந்தனர் –
திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன் ராம்,நரைமுடி கணேசன், தினேஷ் ஆகிய ரவுடிகள் கடந்த வாரம் ஆஜரான நிலையில் இன்று ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்திய திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வழக்கை வருகின்ற 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் ரவுடிகள் தங்களது தரப்பில் ஆட்சேபனை  மனுக்களை வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த தகவல் :

உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம் – அது இன்று விசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் இந்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

எங்கள் தரப்பில் அனைத்து மனுக்களையும் சரியான முறையில் தாக்கல் செய்துள்ளோம் – ஆனால் ரவுடிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் சரியான மனு தாக்கல் செய்யவில்லை என  கூறுகிறார்கள் என்றார்.

எதுவாக இருந்தாலும் வரும் 14ஆம் தேதி தெளிவாக தெரிந்து விடும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

– – –

உண்மை கண்டறியும் சோதனை பட்டியலில் உள்ள சத்யராஜின் வழக்கறிஞர் அலெக்சியஸ் சுதாகர் பேட்டி :

ராமஜெயம் கொலை வழக்கு தாமதமாவதற்கு காரணம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தான் நாங்கள் தான் முதலில் உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்வதற்கு அனுமதி கேட்டோம் – ஆனால் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கான ஆவணங்கள் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை – வழக்கறிஞர் அலெக்ஸியஸ் சுதாகர் பேட்டி.

மேலும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தாலே, 50 லட்ச ரூபாய் சன்மானம் என்று அறிவித்தது எப்படி? இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் பனீந்திர ரெட்டியிடம் விளக்கம் கேட்க உள்ளோம்.

Leave A Reply

Your email address will not be published.