கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை
திருச்சி, அக்.3 திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இதில் மாமன்ற உறுப்பினர் செந்தில் பேசுகையில்,
கடந்த மாதம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தன்னிகரற்ற தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”என்கின்ற மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு பெண்களுக்கு வழங்கி சிறப்பித்தார்
அத்தகைய சிறப்புமிக்க திட்டத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றத்தில் நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுகிறேன்
மேலும் எனது வார்டில் ஏழு கல்வெட்டு பாலம் முற்றிலுமாக சிதலடைந்து உள்ளதை மறு சீரமைப்பு அமைத்திடவும்
காவேரி நகரில் சத்துணவு கூடம் சிதலடைந்து உள்ளதை மறு சீர் அமைத்திடவும்,
பர்மா காலனியில் உள்ள பூங்காவை விரைவில் சீரமைத்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திட ஆவனம் செய்திட இந்த மாமன்றத்திலே கேட்டுக் கொள்கிறேன் .