அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி உலகசாதனை நிகழ்வாக பதிவு
திருச்சி மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சி, உலக சாதனை நிகழ்வில் ஒரு அங்கமானது
திருச்சி மாவட்டத்தில்
ஆசிரியர்.தனலட்சுமி & அசிரியர்.சத்யபிரபா ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் தன்னார்வமாக ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கூட்டு முயற்சியாக ஆன்லைன் கல்வி ரேடியோவின் குடியரசு தின செயல்பாடுகளில்
ஏறக்குறைய 200 மாணவர்களை பங்கெடுக்க செய்து பல தலைப்புகளில் பேசி ஆடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளனர். இந்த தன்னார்வ கூட்டு முயற்சி உலகசாதனை நிகழ்வாக பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் , புவனகிரியில் , கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியரான நல்லாசிரியர் ஆ.கார்த்திராஜா ஆகியோரால் உருவாக்கப்பட்டது இணையவழி கல்வி வானொலியான www.kalviradio.com எனும் Online Kalviradio.
இது அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சியாக கோரானா கால ஊரடங்களில் மாணவர்கள் சுயகற்றல் மேற்கொள்ளவதற்காகவும் , மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்பதற்காகவும் மின்மினிகள் மின்னும் நேரம் என்ற பகுதியில் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி , மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்படுத்தி, கற்றலை வலுப்படுத்தி வருகிறது. மேலும் இந்த தன்னார்வ செயல்பாடுகளின் ஈடுபடும் மாணவர்களுக்கு பல தன்னார்வ அமைப்புகள் மூலம் சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தியும் , பாராட்டியும் வருகிறது.
அந்தவகையில் குடியரசு தினத்திற்கான தன்னார்வ செயல்பாடுகளாக மாணவர்களுக்கு சில தலைப்புகளை வழங்கியது.
இந்த செயல்பாட்டில்
தமிழ்நாடு முழுவதிலும் பல மாவட்டங்களிலிருந்து
2000 மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்றனர்.
இதன் மூலம் மாணவர்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட 8000த்திற்கும் மேற்பட்ட Audioகள் Online KalviRadioவில் 60 மணிநேரம் தொடர்ச்சியாக ஒலிப்பரப்பாகி உலக சாதனை நிகழ்வாக யுனிவர்சல் அச்சீவர்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக ஆப் ரேக்கார்டில் பதிவாகியுள்ளது.
இச்செயல்பாட்டில் ஈடுபட்ட மாணவர்களையும் , ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர்கள்,
வட்டாரக்கல்வி அலுவலர்கள் என அனைவரும் பாராடியுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.