சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிசட்டி எடுத்த கஞ்சா கருப்பு..! எடப்பாடி முதல்வராக வேண்டுதல்…!

0 368
Stalin trichy visit

திருச்சி. ஏப்ரல்.07, திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஆனதை தொடர்ந்து அடுத்து முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு மனைவி, மகன்,மகள் மற்றும் உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், பூக்கூடை சுமந்து வந்தும் நேர்தி கடன் செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அஇஅதிமுக வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப் பட்டிருக்கின்ற நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னை அதிமுக வில் இணைத்துக் கொண்டார் பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அவரது மனை இரண்டு பேர் அக்னிச் சட்டி ஏந்தியும், மகன் பால்குடம் சுமந்தும், மகள் வேப்பிலை உடை அணிந்து பூக்கூடை ஏந்தியும் மற்றும் உறவினர்கள் கோவில் கிரிவலத்தை சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக இருக்கிறார் மேலும், அவர் அடுத்து முதலமைச்சர் ஆக வேண்டும் என எனது குடும்பத்துடன் வேண்டிக் கொண்டு மகன் மகள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரும் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிசட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் பூக்கூடை சுமந்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளோம் எனவும்,

ஆளுங்கட்சியைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை அது மக்களுக்கே தெரியும் என்றும், இன்றைய காலகட்டத்தில் மின்சார கட்டணம் விலைவாசி உயர்ந்து வருகிறதாகவும், இதனால் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டு நேர்த்தி கடன் செலுத்தியுள்ளேன் எனவும், அவர் கூறினார். திரைப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாகவும் நாற்காலி, இறைவன் மிகப்பெரியவன், இடி முழக்கம், சபரி ஐயப்பா போன்ற படங்களில் நடித்துள்ளேன் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.